வருகிற 25-ம் தேதி சென்னை புறநகர் ரெயில் சேவை ஞாயிறு அட்டவணையின்படி இயங்கும் - தெற்கு ரெயில்வே தகவல்

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரெயில்கள் அனைத்தும் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2023-12-22 17:14 IST

சென்னை,

ஏசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 3 தினங்களே உள்ள நிலையில், பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்கான முன்னேற்பாடு பணிகளில் கிறிஸ்தவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், வருகிற 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பொது விடுமுறை விடப்படுவதால் சென்னை புறநகர் ரெயில்கள் ஞாயிறு அட்டவணையின்படி இயங்கும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி, சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரெயில்கள் அனைத்தும் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்