ஒமைக்ரான் மாறுபாடு: விமான நிலையங்களில் மீண்டும் கொரோனா பரிசோதனை - மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம்
விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகளை வழங்க கோரி மத்திய அரசுக்கு தமிழக சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது.
சென்னை,
சீனாவில் கடந்த 2019 டிசம்பரில் தோன்றிய கொரோனா வைரஸ் பெருந்தொற்று நமது நாட்டில் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. ஆனால் சீனா, ஜப்பான், தென்கொரியா, பிரேசில், அமெரிக்கா போன்ற நாடுகளில் பிஎப்-7 ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று திடீர் எழுச்சி பெற்று வேகமாக பரவி வருகிறது.
இந்த தொற்று இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி குஜராத்தில் 2 பேரும் ஒடிசாவில் ஒருவரும் பிஎப்-7 ஒமைக்ரான் திரிபால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் சீனா மற்றும் ஹாங்காங்கில் இருந்து தமிழகம் வருவோருக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்க கோரி மத்திய அரசுக்கு தமிழக சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது.