திண்டுக்கல் அருகே கார் மோதி மூதாட்டி பலி

திண்டுக்கல் அருகே கார் மோதி மூதாட்டி பலியானார்.;

Update: 2022-08-16 17:25 GMT

திண்டுக்கல் அருகே உள்ள நல்லாம்பட்டியை சேர்ந்தவர் சின்னக்கோனார். அவருடைய மனைவி சிட்டுப்பிள்ளை (வயது 67). கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர், சாணார்பட்டி அருகே உள்ள ராகலாபுரத்தில் நடந்த திருவிழாவில் கலந்து கொள்ள சென்றார்.

அப்போது சாணார்பட்டியில், திண்டுக்கல்-நத்தம் சாலையை அவர் கடக்க முயன்றார். இதில் அவர் மீது கார் மோதி படுகாயமடைந்தார். இவருக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அங்கு சிகிச்சை பலனின்றி சிட்டுப்பிள்ளை பரிதாபமாக நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Tags:    

மேலும் செய்திகள்