வாகனம் மோதி மூதாட்டி பலி

நாமக்கல் அருகே வாகனம் மோதி மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-09-17 19:37 GMT

நாமக்கல் அருகே உள்ள செல்லப்பம்பட்டி ஜெயந்தி காலனியை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மனைவி அமுலு (வயது 68). கூலித்தொழிலாளி. இவர் புதன்சந்தை மேம்பாலம் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்த நல்லிபாளையம் போலீசார், அமுலுவின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, அமுலுவின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்