ஆட்டோ மோதி மூதாட்டி பலி

தஞ்சையில் பரிதாபம்: ஆட்டோ மோதி மூதாட்டி பலி;

Update: 2023-09-05 18:45 GMT


தஞ்சை ரெயில் நிலையம் அருகே 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற ஆட்டோ அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அந்த பெண்ணை சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரிய வில்லை. இது குறித்து தஞ்சை நகர போக்குவரத்து குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்