மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி சாவு

மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி சாவு

Update: 2023-07-19 20:26 GMT

திருவையாறை அடுத்த நடுக்கடை மெயின் ரோட்டை சேர்ந்த சாகுல் ஹமீது மனைவி சிராஜின்நிஷா (வயது60). நேற்று காலை இவர் காய்கறி வாங்குவதற்காக நடுக்கடை மெயின் சாலைக்கு வந்தார். அப்போது சாைலயை கடக்க முயன்ற போது திருவையாறில் இருந்து தஞ்சை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சிராஜின்நிஷா மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருவையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்