சரக்கு ஆட்டோ மோதி முதியவர் படுகாயம்
சரக்கு ஆட்டோ மோதி முதியவர் படுகாயம் அடைந்தார்.
வேலாயுதம்பாளையம் கடைவீதி பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 70).இவர் கரூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாலத்துறை அருகே கூலக்கவுண்டனூர் பகுதிக்கு செல்லும் பிரிவு சாலையில் செல்வதற்காக சாலையை கடந்த போது அதே சாலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் ஓட்டி வந்த சரக்கு ஆட்டோ விஸ்வநாதன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த விஸ்வநாதன் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து விஸ்வநாதனின் மனைவி சாந்தி (65) கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார் சரக்கு ஆட்டோ டிரைவர் செல்வராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.'