குளத்தில் பிணமாக கிடந்த முதியவர்

நெல்லை அருகே குளத்தில் முதியவர் பிணமாக கிடந்தார்.;

Update: 2023-01-11 19:29 GMT

நெல்லை தச்சநல்லூரில் இருந்து எட்டெழுத்து பெருமாள் கோவில் செல்லும் வழியில் சேந்திமங்கலம் குளம் உள்ளது. இந்த குளத்தில் நேற்று மாலையில் ஆண் பிணம் கிடப்பதாக அந்த பகுதி பொதுமக்கள் தச்சநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குளத்தில் இறந்து கிடந்தவர் தாழையூத்து குறிச்சிகுளம் தங்கம்மன்கோவில் தெருவை சேர்ந்த பேச்சுமுத்து (வயது 65) என்பதும், பெயிண்டரான அவர் காலையில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றதும் தெரியவந்தது. அவர் எப்படி குளத்தில் இறந்து கிடந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்