பள்ளி வேன் மோதி முதியவர் பலி

பள்ளி வேன் மோதி முதியவர் பலியானார்.;

Update: 2022-09-15 18:48 GMT

அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் உள்ள தனியார் பள்ளிக்கு சொந்தமான வேன் ஒன்று நேற்று வழக்கம்போல் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்று கொண்டிருந்தது. எருக்கலக்கோட்டை என்ற இடத்தில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் சென்ற பூவற்றக்குடியை சேர்ந்த சுப்பையா (வயது 60) என்பவர் மீது பள்ளி வேன் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சுப்பையா பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்திற்கு காரணமான வேன் டிரைவர் மேற்பனைக்காட்டை சேர்ந்த அருண் (28) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்