மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

வாடிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியானார்கள்.;

Update: 2023-06-11 18:49 GMT

வாடிப்பட்டி, 

வாடிப்பட்டி அருகே செம்புக்குடிபட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் கருப்பையா (வயது 68). இவர் கடந்த 7-ந் தேதி இரவு 10.50 மணிக்கு செம்புகுடிப்பட்டி வீட்டில் இருந்து தனிச்சியம் ரோட்டில் நடந்து சென்றார். சிங்கம்பிடாரி கோவில் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் கருப்பையா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டவர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்தியபிரியா, சப்-இன்ஸ்பெக்டர் மாயாண்டி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்