மாமல்லபுரம் அருகே கார் மோதி முதியவர் பலி

மாமல்லபுரம் அருகே கார் மோதி முதியவர் பலியானார்.;

Update: 2023-08-18 08:14 GMT

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் ஒத்தவாடை தெருவில் வசித்து வந்தவர் ரிஷிகேசவன் (வயது 70). இவர் மாமல்லபுரம் தொல்லியில் துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த ஒய்வு பெற்ற பணியாளர். இந்த நிலையில் நேற்று ரிஷிகேசவன் ஒரு வேலை விஷயமாக தனது மோட்டார் சைக்கிளில் மாமல்லபுரம் அடுத்த திருக்கழுக்குன்றம் பகுதிக்கு சென்றுவிட்டு மீண்டும் மாமல்லபுரத்துக்கு திரும்பி கொண்டிருந்தார்.

பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அரசு ஆஸ்பத்திரி எதிரில் சாலையை கடந்து மாமல்லபுரம் நகர பகுதிக்கு திரும்பும் போது, சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் ரிஷிகேசவன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் மற்றும் போலீசார் விபத்தில் இறந்த ஒய்வு பெற்ற தொல்லியல் துறை பணியாளர் ரிஷிகேசவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்