கார் மோதி முதியவர் பலி

மொபட் மீது கார் மோதி முதியவர் உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-03-18 16:39 GMT

சத்திரப்பட்டி அருகே உள்ள வீரலப்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 72). இவர், வீரலப்பட்டி ஊராட்சியில் குடிநீர்தொட்டி ஆபரேட்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். நேற்று மதியம் இவர், சத்திரப்பட்டியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தனது மொபட்டுக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக சென்றார்.

சத்திரப்பட்டி அருகே திண்டுக்கல்-பழனி நெடுஞ்சாலையில் மொபட் வந்து கொண்டிருந்தது. அப்போது திண்டுக்கல்லில் இருந்து பழனி நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது.

இதில் நிலைதடுமாறிய ஆறுமுகம் சாலையில் விழுந்தார். அவர் மீது காரின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சத்திரப்பட்டி போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்