தஞ்சையை அடுத்துள்ள பூதலூர் செக்கடி தெருவை சேர்ந்தவர் ராமன் (வயது 70). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு செங்கிப்பட்டி அருகே புதுக்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று அவர் தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புதுக்குடி பிரிவு சாலை அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது திருச்சியிலிருந்து தஞ்சை நோக்கி வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக ராமன் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த செங்கிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ராமனின் அண்ணன் மகளான புதுக்குடியை சேர்ந்த உஷா கொடுத்த புகாரின்பேரில் செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.