கார் மோதி முதியவர் பலி

Update: 2023-08-25 18:45 GMT

வாழப்பாடி

வாழப்பாடி அருகே சோமம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 72). இவர் சேசஞ்சாவடி அருகே தனியார் ஓட்டல் முன்பு மொபட்டில் சென்றபோது அந்த வழியாக வந்த கார் கந்தசாமி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கந்தசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கந்தசாமி மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்