ஆட்டோ கவிழ்ந்து முதியவர் பலி
பெரியகுளம் அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் முதியவர் பலியானார்.;
பெரியகுளம் அருகே உள்ள வடுகப்பட்டியை சேர்ந்தவர் சண்டிவீரன் (வயது 77). நேற்று முன்தினம் இவர், பெரியகுளத்தில் இருந்து வடுகப்பட்டிக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். பங்களாப்பட்டி பிரிவு அருகே வந்தபோது வேகத்தடையில் ஆட்டோ ஏறி இறங்கியது. அப்போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே சண்டிவீரன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து ஆட்டோ டிரைவரான யோகபாலன் (21) என்பவர் மீது தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.