தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் பிணம்

செய்யாறு அருகே தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் பிணமாக கிடந்தார்.;

Update: 2023-06-11 13:24 GMT

செய்யாறு

செய்யாறு தாலுகா தும்பை கிராமம் வளர்புரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 80). இவரது மனைவி காலமாகிவிட்ட நிலையில், மகன் நாராயணமூர்த்தியுடன் வசித்து வந்தார்.

நாராயணமூர்த்தி குடித்து விட்டு அடிக்கடி வந்து பாலகிருஷ்ணனிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று  காலை வீட்டின் பின்புறத்தில் உள்ள நிலத்தில் பாலகிருஷ்ணன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் செய்யாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் தனது தந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவரை எனது தம்பி நாராயணமூர்த்தி அடித்து தூக்கில் தொங்கவிட்டிருக்கலாம் என இறந்தவரின் மகள் கோகிலா செய்யாறு போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்