தேனி பஸ் நிலையத்தில் முதியவர் பிணம்

தேனி பஸ் நிலையத்தில் முதியவர் பிணமாக கிடந்தார்.

Update: 2023-07-28 18:45 GMT

தேனி புதிய பஸ் நிலையத்தில் டவுண் பஸ்கள் நிறுத்தும் பகுதியில் நேற்று முன்தினம் முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தேனி போலீஸ் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் ஜீவா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவருக்கு சுமார் 70 வயது இருக்கும். அவர் பெயர், விவரம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்