மரத்தில் இருந்து தவறி விழுந்த முதியவர் சாவு

பந்தலூரில் மரத்தில் இருந்து தவறி விழுந்த முதியவர் இறந்தார்.;

Update: 2023-06-23 21:45 GMT

பந்தலூர்

பந்தலூர் இன்கோ நகரை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (வயது 65). இவர் தனது தோட்டத்தில் பாக்கு மரத்தின் மேல் ஏறிய போது, தவறி கீழே விழுந்து உள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி நேற்று ரகுமான் இறந்தார். தொடர்ந்து தேவாலா சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி மானந்தவாடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்