தங்கும் விடுதியில் முதியவர் மர்ம சாவு
தங்கும் விடுதியில் முதியவர் மர்மமாக இறந்து கிடந்தார்.
கோத்தகிரி,
திருச்சி மாவட்டம் உறையூர் நவாப் தோட்டத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 60). இவர் ஒரு கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்து, ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவாகி உள்ளார். பின்னர் அவரை போலீசார் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர். 25 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த சரவணன், கோத்தகிரி பஸ் நிலையம் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார். நேற்று அறை கதவு வெகு நேரமாகியும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் கோத்தகிரி போலீசாருக்கு தெரிவித்தனர். பின்னர் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சரவணன் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாரடைப்பால் உயிரிழந்து இருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.