மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் பலி

திருவண்ணாமலையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் பரிதாபமாக இறந்தார்.;

Update: 2023-01-29 14:39 GMT

திருவண்ணாமலை நல்லவன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமு (வயது 72).

இவர் நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் நல்லவன்பாளையத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்தார்.

தேனிமலை அருகில் வரும்போது அங்குள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகில் செல்ல சாலையில் திடீரென திரும்பியதாக கூறப்படுகிறது.

அப்போது எதிரில் வந்த ராமலிங்கனார் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (54) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக ராமுவின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் 2 மோட்டார் சைக்கிளில் வந்தவர்களுக்கும் படுகாயம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

மேலும் அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் போில் சம்பவ இடத்திற்கு 108 ஆம்புலன்சு வந்தது. இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ராமு பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சுப்பிரமணி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்த ராமுவின் மருமகன் ஆறுமுகம் என்ற தையல் கடைக்காரரை கடந்த 7-ந் தேதி கூலிப்படையினரால் வெட்டி கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்