ஊத்தங்கரை:-
கல்லாவி துரைசாமிநகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 70). இவர் நேற்று முன்தினம் இரவு கல்லாவி ெரயில்வே ஸ்டேஷனில் திருப்பதி செல்ல டிக்கெட் வாங்கி கொண்டு எதிர்திசையில் ெரயில் ஏறுவதற்காக ெரயில் பாதையை கடக்க முயன்றார். அப்போது எதிர் திசையில் வந்த ெரயில் அவர் மீது மோதியதில் ெரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். உயிரிழந்த முருகேசன் உடலை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விபத்து குறித்து ெரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.