மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு

வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் உயிரிழந்தார்.

Update: 2022-09-29 18:45 GMT

வேதாரண்யம்:

திருவாரூர் வடபாதிமங்கலத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது70). இவர் வேதாரண்யம் அருகே வேட்டைக்காரனிருப்பு பகுதியில் உள்ள ஒரு இறால் பண்ணையில் வேலை பார்த்து வந்தார். இவர் சம்பவத்தன்று வேட்டைகாரனிருப்பு புதுக்கடை அருகே சாலையை கடக்கும்போது புதுப்பள்ளியை சேர்ந்த ரமேஷ் (32) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ராமலிங்கம் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவாருரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் போரில் வேட்டைகாரணிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்