தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை
தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை செய்து கொண்டார்;
சிவகாசி
சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டியை சேர்ந்தவர் சவுந்திரராஜன் (வயது 66). இவருக்கு கடந்த 2 ஆண்டுகளாக கண் வலி இருந்து வந்துள்ளது. பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் கண்வலி சரியாகவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் மீனம்பட்டி சுடுகாட்டில் உள்ள வேப்பமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த சிவகாசி கிழக்குபோலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சவுந்திரராஜன் உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து உறவினர் ஜெயமாதா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.