3 மகன்கள் உணவு கொடுக்காததால் முதியவர் தற்கொலை

பண்ருட்டி அருகே 3 மகன்கள் இருந்தும், அவர்கள் உணவு கொடுக்காத விரக்தியில் முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-08-31 18:14 GMT

பண்ருட்டி, 

பண்ருட்டி அருகே உள்ள எம்.ஏரிப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தேவராசு (வயது 82). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி, தற்போது தனித்தனியாக வசித்து வருகின்றனர். தேவராசுவின் மனைவி ஏற்கனவே இறந்து விட்டதாலும், 3 மகன்களும் கவனிக்காததாலும் அவர் தனிமையில் வசித்து வந்தார்.

மேலும் வயது முதிர்வின் காரணமாக பாதிக்கப்பட்ட தேவராசுவுக்கு, அவரது மகன்கள் உணவு மற்றும் செலவுக்கு பணம் ஏதும் கொடுத்து பராமரிக்கவில்லை என தெரிகிறது.

தற்கொலை

இதனால் மனமுடைந்த அவர், விஷத்தை குடித்து விட்டார். இதில் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி தேவராசு பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மகன்கள் உணவு கொடுத்து கவனிக்காத விரக்தியில் முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்