திருக்காடுதுறை அருகே ஆலமரத்து மேடு பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி அருணாதேவி (வயது 65) இவர்கள் இருவரும் கடந்த 21 ஆண்டுகளாக குடும்ப கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் அருணாதேவி உடல்நலம் சரியில்லாமல் வீட்டில் தனியாக இருந்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று அவரது அக்கா மகன் ராஜசேகர் என்பவருக்கு போன் செய்து தான் சர்க்கரை வியாதி மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வருவதாகவும், இதனால் எனக்கு வாழ பிடிக்கவில்லை செத்துவிடலாம் போல் உள்ளது என கூறியுள்ளார்.இதையடுத்து ராதாகிருஷ்ணன் தனது உறவினர்களுடன் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, கதவு வௌிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து சந்்தேகத்தின் பேரில் ஜன்னல் வழியாக உள்ளே எட்டிபார்த்தனர். அப்போது அருணாதேவி தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அருணாதேவியை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ராதாகிருஷ்ணன் கொடுத்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.