மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி

புதுக்கடை அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலியானார்.;

Update: 2023-02-04 18:45 GMT

புதுக்கடை:

புதுக்கடை அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலியானார்.

புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். இவருடைய மனைவி மேரி ராஜம் (வயது 72). இவர் சம்பவத்தன்று குன்னத்தூர் முன்சிறை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் ராஜம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவரை அப்பகுதியில் நின்றவர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ராஜம் மகள் ஹெலன் மேரி (45) புதுக்கடை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்