மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி

மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலியானார்.

Update: 2023-08-04 19:49 GMT

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வநாயகி (வயது 70). இவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தூத்துக்குடிக்கு செல்வதற்காக வேனில் வந்தனர். வேன் நேற்று அதிகாலை 3 மணி அளவில் மதுரை-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை ஜிகார்னர் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென்று வேன் பழுதானது. இதனால் வேனில் இருந்தவர்கள் அனைவரையும் கீழே இறக்கி விட்டுவிட்டு, வேனை சாலையின் எதிர்புறம் உள்ள ஒர்க் ஷாப்புக்கு கொண்டு சென்றனர். அப்போது, செல்வநாயகி தனது செல்போனை வேனிலேயே வைத்துவிட்டு கீழே இறங்கியுள்ளார். இதனால் தனது செல்போனை எடுப்பதற்காக சாலையை கடந்து சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவருக்கு தலை, முகம், இடது கை மற்றும் இரு கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அவருடைய உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து செல்வநாயகியின் மகன் ராஜரத்தினம் கொடுத்தபுகாரின் பேரில் திருச்சி தெற்கு குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்