சென்னையில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் எண்ணெய் கசிந்ததால் பரபரப்பு

குடிநீர் குழாய் பதிப்பதற்காக குழி தோண்டிய போது பூமிக்கு அடியில் இருந்து கருப்பு நிறம் கொண்ட திரவம் வெளியேறியது.;

Update:2022-10-05 02:25 IST

சென்னை,

சென்னை ஆர்.கே.நகரில் உள்ள நெடுஞ்செழியன் நகர் பகுதியில் 27 லட்சம் ரூபாய் மதிப்பில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் துவங்கப்பட்டது. இதற்காக ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலம் குழிகளை தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது பூமிக்கு அடியில் இருந்து கருப்பு நிறம் கொண்ட திரவம் வெளியேறியது.

இது குறித்து தகவலறிந்த தண்டையார்பேட்டை மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இதையடுத்து பூமிக்கு அடியில் இருந்து கசிவது எண்ணெய் என உறுதி செய்த பின்னர் இந்திய ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன அதிகாரிகளை தொடர்பு கொண்டு எண்ணெய் கசிவை சரிசெய்யக் கோரி அவர் வலியுறுத்தினார். 

Tags:    

மேலும் செய்திகள்