ஓட்டலுக்கு சீல் வைத்த அதிகாரிகள்

சோதனையின் போது கெட்டு போன உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து ஓட்டலுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.;

Update: 2023-08-02 22:12 GMT

மதுரை காமராஜர் சாலை-தெப்பக்குளம் சாலையில் அசைவ ஓட்டல் செயல்பட்டு வந்தது. இந்த ஓட்டலில் இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டன் சிவா சில நாட்களுக்கு முன்பு, தனது குடும்பத்துடன் உணவு வாங்கி சாப்பிட்டுள்ளார். அன்று இரவே சிவா மற்றும் அவருடைய 2 குழந்தைகளுக்கும் திடீரென வயிற்று வலி ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனை அவர் சமூக வலைதளங்களில் பதிவு செய்திருந்தார். இதன் எதிரொலியாக, அந்த அசைவ ஓட்டலில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். ஆய்வின்போது உணவகத்தின் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 3 கிலோ கெட்டுப் போன இறைச்சி மற்றும் சிக்கன் ரைஸ் போட பயன்படும் 4 கிலோ பழைய சாதம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இந்தநிலையில், நேற்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதன்பேரில் அந்த ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டு, உணவகத்தின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்