ராமநாதபுரத்தில் அதிகாரிகள் சோதனை: அதிக கட்டணம் வசூலித்த 4 ஆம்னி பஸ்கள் சிறைபிடிப்பு

ராமநாதபுரத்தில் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் அதிக கட்டணம் வசூலித்ததாக 4 ஆம்னி பஸ்கள் சிறை பிடிக்கப்பட்டன.;

Update:2023-10-15 00:45 IST

அதிக கட்டணம் புகார்

விழா காலங்களில் வெளியூர்களில் பணியாற்றுபவர்கள் சொந்த ஊர்களுக்கு அதிக அளவில் வந்து செல்வது வழக்கம். இதுபோன்ற சமயங்களில் தனியார் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக புகார் வந்தது. இந்நிலையில் மகாளய அமாவாசையையொட்டி தமிழகம் முழுவதும் பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தது. அந்த புகாரை தொடர்ந்து மாநிலம் முழுவதும் அதிரடி சோதனை நடத்த போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டார்.

இதன்படி ராமேசுவரத்திற்கு ஏராளமான சொகுசு பஸ்கள் வெளியூர்களிலிருந்து பயணிகளை அதிக கட்டணங்கள் வசூலித்து ஏற்றி வருவதாக தகவல் கிடைத்தது.

அதன்பேரில் ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் அலுவலர்கள் பாத்திமா பர்வீன், பத்மபிரியா ஆகியோர் ராமநாதபுரத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

4 பஸ்கள் சிறைபிடிப்பு

இந்த சோதனையில் சென்னை மற்றும் பெங்களூரு, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த 4 ஆம்னி பஸ்கள் சுற்றுலா செல்லக்கூடிய சொகுசு பஸ்சில் பயணிகளை ஏற்றி வந்ததும், அதில் அதிக கட்டணம் வசூலித்ததும் தெரியவந்தது.

இதை தொடர்ந்து 4 ஆம்னி பஸ்களையும் அதிகாரிகள் சிறைபிடித்து அரசு போக்குவரத்து பணிமனையில் நிறுத்தி வைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்