பொள்ளாச்சி அருகே சாலையை அகலப்படுத்துவது குறித்து அதிகாரிகள் ஆய்வு

பொள்ளாச்சி அருகே சாலையை அகலப்படுத்துவது குறித்து அதிகாரிகள் ஆய்வு;

Update: 2023-02-10 18:45 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே வால்பாறை ரோடு மணல் மேட்டில் இருந்து கரியாஞ்செட்டிபாளையம் வரை உள்ள சாலை குறுகலாக உள்ளது. இதன் காரணமாக அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இந்த நிலையில் தற்போது உள்ள சாலை மேலும் 5 அடிக்கு அகலப்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் சாலை அகலப்படுத்தும் பணிக்கு இடையூறாக உள்ள மரங்களை வெட்டுவது, மறுநடவு செய்வது குறித்து பசுமை குழு மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது எந்ததெந்த மரங்களை வெட்டி அகற்றுவது என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் உதவி பொறியாளர் உசேன், சாலை ஆய்வாளர் சத்யா மற்றும் பசுமை குழுவினர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்