அசைவ உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு
பாபநாசம் பகுதி அசைவ உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.;
பாபநாசம்;
நாமக்கல் மாவட்டத்தில் சவர்மா சாப்பிட்டு மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அசைவ உணவுகள் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு நடத்த சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து பாபநாசம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அசைவ உணவகங்களில் சுகாதாரத்துறை ஆய்வாளர் பரமசிவம், சுகாதார துறை மேற்பார்வையாளர் நாடிமுத்து, ஆகியோர் ஆய்வுப்பணியில் ஈடுபட்டனர். ஆய்வின் போது உணவுகளில் கெட்டுப்போன கோழி இறைச்சிகள், மீன் இறைச்சிகள் உள்ளதா? என்றும் தேதி முடிவுற்ற பயன்படுத்த முடியாத பொருள்கள் உணவகத்தில் உள்ளதா? என்றும் பார்வையிட்டனர். மேலும் சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.