நுகர்பொருள் வாணிப கிடங்கில் அதிகாரி ஆய்வு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் அதிகாரி ஆய்வு செய்தாா்.;

Update: 2023-04-25 18:45 GMT

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி ஏமப்பேரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குனர் பிரபாகர் ஆய்வு செய்தார். அப்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகிக்கப்படும் அரிசி, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு நிலைகள் குறித்தும், பொது வினியோக கடைகளுக்கு வாகனங்கள் மூலம் எடுத்துச் செல்லப்படும் பொருட்களின் விவரம் குறித்தும் ஆய்வு செய்தார். பின்னர், குறித்த நேரத்திற்குள் நியாயவிலை கடைக்கு பொருட்களை அனுப்ப வேண்டும். பாதுகாப்பான முறையில் மூட்டைகளை அடுக்க வேண்டும் என நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது கள்ளக்குறிச்சி நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் கந்தசாமி மற்றும் கண்காணிப்பாளர், பணியாளர்கள் உடன் இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்