பொங்கல் பரிசு தொகுப்பில் தேங்காய் வழங்கக்கோரிபா.ஜ.க. விவசாய அணியினர் ஆர்ப்பாட்டம்
பா.ஜ.க. விவசாய அணி சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
பா.ஜ.க. விவசாய அணி சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழக அரசு பொங்கல் பண்டிகையையெட்டி ரேஷன் கடைகள் மூலம் வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் தேங்காய் வழங்க வேண்டும், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.