ஆச்சார அனுஷ்டான பாதுகாப்பு தினம் நாளை அனுசரிப்பு

ஆச்சார அனுஷ்டான பாதுகாப்பு தினம் நாளை அனுசரிக்கப்படுவதாக சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் அறிவித்துள்ளது.

Update: 2023-09-30 18:22 GMT

இளம் பெண்கள் சபரிமலைக்கு செல்லலாம் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கிய நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி கேரளாவில் ஏற்பட்ட எழுச்சியை கொண்டாடும் விதமாக அந்த நாள் ஆச்சார அனுஷ்டான பாதுகாப்பு தினமாக கடைபிடிக்கப்படுவதாக சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் அமைப்பின் வட தமிழ்நாடு தலைவர் வி.ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2018-ம் ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி சுவாமி அய்யப்பன் வளர்ந்த பந்தளம் அரண்மனையை சேர்ந்த தெருக்களில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் சம்பிரதாயத்தை காக்க போராடுவோம் என உறுதிமொழி ஏற்றனர். இந்த போராட்டம் அய்யப்ப பக்தர்கள் இடையே வரவேற்பை பெற்றது. சபரிமலை அய்யப்ப சேவா சமாஜ நிர்வாகிகள் இந்த தீர்ப்பு குறித்த மனக்கவலையை பல்வேறு இந்து அமைப்புகளின் முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்து தெரிவித்தனர். இத்தகைய தினத்தை கொண்டாடும் விதமாக ஆச்சார அனுஷ்டான பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுவதாகவும், தமிழகம் மற்றும் கேரளாவில் அய்யப்ப யோகங்கள் மற்றும் பெண்களுக்கான சபரி மாதா சிறப்பு கூட்டம் மற்றும் சிறப்பு பூஜைகள் ஏற்பாடு செய்யப்படும். இதில் துறவிகள் மற்றும் குருசுவாமிகள் பங்கு பெறுவார்கள் என தெரிவிதுள்ளார்.

அதேபோல மனிதர்களுக்கு அமுது அய்யப்ப தர்மம் என்ற தலைப்பில் புத்தகத்தை அச்சிட்டு வினியோகம் செய்யப்பட உள்ளதாக சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் வட தமிழ்நாட்டு தலைவர் ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்