பெண்ணிடம் ஆபாச சைகை காட்டியவர் கைது

தூத்துக்குடியில் பெண்ணிடம் ஆபாச சைகை காட்டியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-03 18:45 GMT

தூத்துக்குடி தெர்மல்நகரை சேர்ந்த பெண் ஒருவர் நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதற்காக அனல்மின்நிலைய ரவுன்டானா அருகே சென்று கொண்டு இருந்தாராம். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த தூத்துக்குடி ஆசிரியர் காலனியை சேர்ந்த மாரியப்பன் (50) என்பவர் அந்த பெண்ணிடம் ஆபாசமாக சைகை காண்பித்ததாக கூறப்படுகிறது. இதனை அந்த பெண் கண்டித்தாராம். இதனால் அந்த பெண்ணை மாரியப்பன் மிரட்டி உள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தெர்மல்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்