ஓ.பன்னீர்செல்வம் அணி-அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

ஓ.பன்னீர்செல்வம் அணி-அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2023-08-01 18:39 GMT

பெரம்பலூரில் நேற்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணி மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பழைய பஸ் நிலையத்தில் காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. கோடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் குறித்து துரித விசாரணைக்கு நடவடிக்கை எடுக்காத தி.மு.க. அரசை கண்டித்தும், இந்த வழக்கு விசாரணையை விரைவுபடுத்தி குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை பெற்றுத்தர முதல்-அமைச்சரை வலியுறுத்தியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜெயலலிதா பேரவையின் மாநில செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராமச்சந்திரன் தலைமை தாங்கி, ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை, பெரம்பலூர், வேப்பூர், ஆலத்தூர் ஆகிய ஒன்றிய பகுதிகளில் இருந்தும், செந்துறை பகுதியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் அணி நிர்வாகிகள் மற்றும் அ.ம.மு.க. பொறுப்பாளர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்