சென்னை வந்தடைந்தார் ஓ.பன்னீர் செல்வம்; ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தேனியில் இருந்து சென்னை வந்தடைந்தார்.

Update: 2022-06-27 10:37 GMT

சென்னை,

நேற்று ஓ.பி.எஸ் தேனி புறப்பட்டு சென்றபின், அதிமுக தலைமக்கழக நிர்வாகிகள் கூட்டம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் சென்னை வந்தடைந்தார் ஓ.பன்னீர் செல்வம்.

தேனி சென்றிருந்த ஓபிஎஸ், மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த விமானநிலையத்தில் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஓ.பன்னீர் செல்வத்தின் அடுத்த நகர்வு என்ன என்பது அரசியல் நோக்கர்கள் காத்துகொண்டிருக்கின்றனர்.

சென்னை ஈசிஆரில் உள்ள விஜிபி இடத்தில் அதிமுக பொதுக்குழுவுக்கு புதிய இடத்தை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்