சபாநாயகருக்கு ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் கடிதம்

சட்டசபை நிகழ்வுகளில் அதிமுக சார்ந்த எந்த முடிவு எடுத்தாலும் தன்னிடமிருந்து கலந்து ஆலோசிக்க வேண்டும் என சபாநாயகருக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதி உள்ளார்.;

Update: 2022-10-11 09:52 GMT

சென்னை,

தமிழக சட்டசபை 17-ந் தேதி கூடுகிறது. மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்று மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா மற்றும் மறைந்த பிரபலங்களுக்கு அன்று இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு அவை ஒத்தி வைக்கப்படுகிறது. பின்னர் சட்டசபை கூட்டத் தொடர் நடக்கும் நாட்கள் குறித்து அலுவல் ஆய்வுக் குழு முடிவு செய்யும்.

இந்தநிலையில், தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது கட்சி தொடர்பாக சட்டப்பேரவையில் யாரும் பேசக்கூடாது என்று அதிமுக எம்எல்ஏக்களுக்கு அவர் மறைமுகமாக உத்தரவு போட்டுள்ளார்.

இதனிடையே சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுக்கு ஓ.பன்னீர் செல்வம் இன்று திடீரென கடிதம் எழுதி உள்ளார். அதில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்பதால் சட்டப்பேரவை நிகழ்வுகளில் கட்சி சார்ந்த எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தன்னிடம் ஆலோசிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். சபாநாயகருக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியிருப்பது அதிமுகவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்