சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தேனி பங்களாமேட்டில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி பங்களாமேட்டில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து சத்துணவு ஊழியர்கள் அங்கிருந்து பழைய பஸ் நிலையம் வழியாக பெரியகுளம் சாலையில் உள்ள எஸ்.பி.ஐ. திடல் வரை ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தின் போதும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.