ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு முகாம்

நெடிமொழியானூரில் ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு முகாம் ஒன்றியக்குழு தலைவர் தொடங்கி வைத்தார்;

Update: 2022-09-19 18:45 GMT

மயிலம்

மயிலம் அருகே உள்ள நெடிமொழியனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு முகம் நடைபெற்றது. இதற்கு நெடி மோழியனூர் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பந்தம், ஒன்றிய கவுன்சிலர் தனலட்சுமி ஆறுமுகம், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர்.பாரதிதாசன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜென்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் கவிதா வரவேற்றார். முகாமில் மயிலம் ஒன்றியக்குழு தலைவர் யோகேஸ்வரி மணிமாறன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் நெடிமொழியனூர் அரசு மேல்நிலைப்பள்ளி துணை தலைமை ஆசிரியர் குட்டி முத்துராஜா, மயிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன், குழந்தை வளர்ப்பு திட்ட ஒருங்கிணைப்பு உதவியாளர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் செயலாளர் பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி மன்ற துணை தலைவர் விஜயகுமாரி ராஜாமணி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்