வயலூர் கிராமத்தில் நூதன பஞ்சலோக அய்யப்பன் சிலை பிரதிஷ்டை

வயலூர் கிராமத்தில் நூதன பஞ்சலோக அய்யப்பன் சிலை பிரதிஷ்டை நடந்தது.

Update: 2022-12-04 15:26 GMT

சேத்துப்பட்டு

வயலூர் கிராமத்தில் நூதன பஞ்சலோக அய்யப்பன் சிலை பிரதிஷ்டை நடந்தது.

சேத்துப்பட்டு தாலுகா வயலூர் கிராமத்தில் உள்ள பாஞ்சாலி அம்மன் கோவிலில் நூதன பஞ்சலோக அய்யப்பன் சிலை பிரதிஷ்டை நடந்தது. இதனையொட்டி 12 கலசங்கள் வைக்கப்பட்டு புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு மகாயாகம் நடத்தப்பட்டது. அதன்பின் கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

இதில் அகில பாரத அய்யப்ப சேவா சங்க குருக்கள் பாலகேணேஷ், மகமாயி திருமணி நடராஜன், வயலூர் பிள்ளையார், நடராஜன், வி. கே.பச்சையப்பன் ஆகியோர் புனித நீர்ஊற்றி பிரதிஷ்டை செய்தனர்.

இதனை ெதாடர்ந்து பஞ்சலோக அய்யப்பனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வயலூர் கிராமத்தில் உள்ள வீதிகளில் எடுத்துச் சென்றனர். பக்தர்கள் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வணங்கினர். இதனையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7 மணி அளவில் சாஸ்தா பூஜை செய்து 18 படி திருவிளக்கு பூஜை, பக்தி பாடல் இன்னிசை ஆகியவை நடைபெற்றது. ஏற்பாடுகளை வயலூர் அய்யப்ப பக்தர்கள், கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்

Tags:    

மேலும் செய்திகள்