தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

கறம்பக்குடி, மணமேல்குடியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2022-10-10 18:30 GMT

கறம்பக்குடியில் ஒன்றிய அளவில் நடைபெறும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி தனியார் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. பயிற்சியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 250 பேர் கலந்து கொண்டனர். இந்த பயிற்சியினை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் நடராஜன், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன பேராசிரியர் புளோரா, அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் சண்முகம் ஆகியோர் பார்வையிட்டனர்.

மணமேல்குடி ஒன்றியம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற எண்ணும் எழுத்தும் பயிற்சியினை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் பார்வையிட்டு பயிற்சியின் செயல்பாடுகளை பாராட்டி மாணவர்களுக்கு அடிப்படை திறன்களை கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி கற்றல் கற்பித்தலை சிறப்பாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் 4 அறைகளில் நடைபெற்ற பயிற்சி மையத்தினை பார்வையிட்டு ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் உபகரணங்களை சிறப்பாக செய்திருப்பதாக கூறினார். இந்த பயிற்சியில் மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தம், புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளர் கோபாலகிருஷ்ணன், வட்டார கல்வி அலுவலர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்