கள்ளழகர் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை
கள்ளழகர் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
அழகர்கோவில்,
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலின் உண்டியல் காணிக்கைகள் அங்குள்ள திருக்கல்யாண மண்டப வளாகத்தில் நேற்று திறந்து எண்ணப்பட்டது. இதில் ரூ.29 லட்சத்து 50 ஆயிரத்து 747-ம், தங்கம் 38 கிராம், வெள்ளி 98 கிராம், வெளிநாட்டு டாலர் நோட்டுகளும் பக்தர்களிடமிருந்து காணிக்கையாக கிடைத்து இருந்தது. உண்டியல் எண்ணும் பணியின்போது கள்ளழகர் கோவில் துணை ஆணையர் ராமசாமி, உதவி ஆணையர் கருணாகரன், தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, ஆய்வாளர் அய்யம்பெருமாள், கண்காணிப்பாளர்கள் சேகர், பிரதீபா, அருள் செல்வன், பேஷ்கார் முருகன், உதவி பேஷ்கார் ஜெயராமன் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.