3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

நாகையில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.;

Update:2022-11-22 00:15 IST

நாகையில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

தென்கிழக்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன்தினம் அதிகாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.இதை தொடர்ந்து நாகை துறைமுக அலுவலகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (செவ்வாய்க்கிழமை) வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்றும், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் பலத்த காற்றுடன் கன மழை பெய்ய கூடும் என்றும் வானிலை ஆய்வு ைமயம் அறிவித்துள்ளது.

3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

இதன்காரணமாக நாகை மீனவர்கள் மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாகை துறைமுகத்தில் நேற்று 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.மீன்வளத் துறையினர் எச்சரிக்கையை தொடர்ந்து நாகை மீனவர்கள் நேற்று 2-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மாவட்டத்தில் 600 விசைப்படகுகளும், 3,500 பைபர் படகுகளும் பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்