சுரண்டையில் என்.ஆர்.தனபாலன் தீவிர வாக்கு சேகரிப்பு

மதுரை நாடார் மகாஜன சங்க தேர்தலில் சுரண்டையில் என்.ஆர்.தனபாலன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்;

Update: 2022-10-21 18:45 GMT

சுரண்டை:

தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில், மதுரை நாடார் மகாஜன சங்கத்திற்கு பொது செயலாளராக போட்டியிடும் வேட்பாளர் என்.ஆர்.தனபாலன் மற்றும் அவரது அணியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதையொட்டி நடந்த நிகழ்ச்சிக்கு சுரண்டை தொழிலதிபர் எஸ்.வி.கணேசன் தலைமை தாங்கினார். மதுரை நாடார் மகாஜன சங்க முன்னாள் இயக்குனர்கள் ஆர்.வி.ராமர், எஸ்.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுரண்டை நாடார் வாலிபர் சங்க பொருளாளர் ஜி.எஸ்.எஸ்.அண்ணாமலைக்கனி வரவேற்றார்.

தமிழ்நாடு பனை வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன், இந்திய நாடார்கள் பேரமைப்பின் மாநில துணை தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார், மத்திய மாவட்ட தலைவர் ஆனந்த் காசிராஜன், கே.டி.பாலன், வக்கீல் சின்னத்தம்பி மற்றும் நிர்வாகிகள் சுரண்டை சிவகுருநாதபுரம் இந்து நாடார் மகிமை கமிட்டி நாட்டாமை எஸ்.தங்கையா நாடார், சுரண்டை காமராஜர் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் காய்கனி மார்க்கெட் நிர்வாகிகள் ஏ.கே.எஸ்.சேர்மசெல்வன், ஏ.ஜி.கணேசன், சரத் மாடசாமி உள்பட பல்வேறு நாடார் சங்கத்தினரை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்