லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது

லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-22 19:13 GMT

குளித்தலை சுங்ககேட் பகுதியில் குளித்தலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டு இருந்த வாலிபரிடம் விசாரித்த போது அவர் குளித்தலை பேராளகுந்தாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த மதன்குமார் (வயது 30) என்பதும், லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்