ஈரோடு இடைத்தேர்தல் குறித்த புகார்கள் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவுப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்த புகார்கள் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவுக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-02-14 18:59 GMT

ஈரோடு இடைத்தேர்தல் குறித்த புகார்கள் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவுப்பு

ஈரோடு,

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்குகள் சேகரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்த புகார்கள் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியும், ஈரோடு மாநகராட்சி ஆணையாளருமான கே.சிவக்குமார் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு ஈரோடு மாநகராட்சி மைய அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் 0424 3500853, 0424 3500854, 1800 425 94890 ஆகிய எண்கள் பயன்பாட்டில் உள்ளன. தேர்தல் தொடர்பான ஏதனும் புகார்கள் இருந்தால் பொதுமக்கள் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்