வாகனத்தை சரியாக பராமரிக்காத டிரைவருக்கு நோட்டீஸ்

வாகனத்தை சரியாக பராமரிக்காத டிரைவருக்கு போலீஸ் சூப்பிரண்டு நோட்டீஸ் வழங்கி உள்ளார்.;

Update: 2023-10-05 17:16 GMT

வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் காவல்துறைக்கு சொந்தமான இருசக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்கள் என்று மொத்தம் 87 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இந்த வாகனங்களை வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆய்வு செய்தார்.

அப்போது அங்கிருந்த வாகனம் ஒன்றில் ஆயில் சரியாக சர்வீஸ் செய்யப்படாததும், பராமரிக்காததும் தெரிய வந்தது. அந்த டிரைவருக்கு ஆயில் பாயிண்ட் எப்படி பார்ப்பது என்றும் தெரியவில்லை. இதையடுத்து அவருக்கு நோட்டீசு வழங்கும்படி போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

மேலும் தினசரி நிகழ்வுகளை சரியாக பராமரிக்காத நெடுஞ்சாலை வாகனம் ஒன்றுக்கு நோட்டீசு வழங்கப்பட்டது. தொடர்ந்து வாகனத்தை சிறப்பாக பராமரித்த டிரைவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பரிசு வழங்கினார்.

ஆய்வின்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன், கோட்டீஸ்ரன், கவுதம், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்