சீர்காழி பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு

சீர்காழி மின்கோட்ட்த்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-08-21 18:45 GMT

பொறையாறு:

சீர்காழி மின்கோட்ட்த்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவாலி, தில்லையாடி

சீர்காழி கோட்டத்திற்குட்பட்ட துணைமின்நிலையத்திலிருந்து செல்லும் திருவாலி, கிடாரங்கொண்டான், மின்பாதையில் பருவகால பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இதிலிருந்து மின்வினியோகம் பெரும் திருவாலி செம்பதனிருப்பு, அல்லிவிளாகம் மெயின் ரோடு ஆகிய இடங்களில் இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

அதேபோல் பொறையாறு. துணைமின் நிலையத்திலிருந்து செல்லும் தில்லையாடி மின்பாதையில் பருவகால பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தில்லையாடி மின்பாதையிலிருந்து மின்வினியோகம் பெரும்பகுதிகளான வள்ளியம்மை நகர், தில்லையாடி, திருவிடைக்கழி, டி.மணல்மேடு, வலையசோழன், நட்சத்திரமாலை, கிள்ளியூர், கண்ணங்குடி மாத்தூர், மாத்தூர்படுகை ஆகிய இடங்களில் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்றும் மின் நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களை பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டது. என்ற தகவலை செம்பனார்கோவில் உதவி மின் செயற்பொறியாளர் அப்துல் வகாப் மரைக்காயர் தெரிவித்துள்ளார்.

எடமணல், கதிராமங்கலம், மாதானம்

சீர்காழி அருகே எடமணல் துணை மின் நிலையத்தில் உள்ள தொடுவாய் உயர் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் வேட்டங்குடி, தொடுவாய், எடமணல் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கும், வைத்தீஸ்வரன் கோவில் துணை மின் நிலையத்திலிருந்து ஆத்துக்குடி செல்லும் உயர் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் ஆத்துகுடி ,தர்மதானபுரம், கதிராமங்கலம், கொண்டத்தூர் ,திருநன்றியூர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கும் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சாரம் இருக்காது . தகவலினை உதவி செயற்பொறியாளர் (தெற்கு) விஜய பாரதி தெரிவித்தார்.

இதே போல் ஆச்சாள்புரம் துணை மின் நிலையத்தில் உள்ள மாதாணம் உயர் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் ஆலாலசுந்தரம், கூத்தியம்பேட்டை, கொப்பியம், அகரவட்டாரம், நல்லநாயகபுரம், ஆலங்காடு, பச்சை பெருமாநல்லூர், உமையாள்பதி, வேம்படி, மாதானம், வேட்டங்குடி, மகாராஜபுரம் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கு இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை உதவி செயற்பொறியாளர் (வடக்கு) விஸ்வநாதன் தெரிவித்தார்.

திருவெண்காடு

திருவெண்காடு துணை மின் நிலையத்தின் மணி கிராமம் மின் பாதையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், மணி கிராமம், தர்ம குளம், பூம்புகார், வானகிரி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது என சீர்காழி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் விஜய பாரதி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்